Friday, May 14, 2010

இஸ்லாம் ஒன்றே தீர்வு அதுவே எமது கோஷம்








கலாநிதி முஹம்மத் பதீஉ
(இஹ்வான் அமைப்பின் பொது கண்காணிப்பாளர்)





நவீன இஸ்லாமிய உலகை வழிநடாத்திச் செல்வதில் இஹ்வான் இயக்கத்துக்குப் பாரிய பங்குண்டு. இஹ்வான் இயக்கம் அறபு-இஸ்லாமிய நாடுகள் தொட்டு உலகின் பல நாடுகளில் நுணுக்கமான திட்ட நகர்வுகளைக் கொண்டு செயற்படுகின்றது. அது இஸ்லாத்தை ஆட்சிபீடமேற்றி வெறும் அரசியலை மாத்திரம் செய்து விட்டுப் போகும் இயக்கமல்ல. உலகம் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாமியத் தீர்வை முன்வைப்பதுதான் இஹ்வான் இயக்கத்தின் சிறப்பம்சம்.

இஹ்வான் இயக்கத்தின் புதிய தலைவராக கலாநிதி முஹம்மத் பதீஉ தெரிவுசெய்யப்பட்டது நாமறிந்ததே. தலைமைப் பொறுப்பை ஏற்றதன் பின் பல தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார் அவர். ஆனால், பதிப்பு ஊடகத்துறை என்ற வகையில் அண்மையில்தான் ஒரு பேட்டி வழங்கப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பெற்றது அறபு ஊடக உலகில் கவனயீர்ப்பைப் பெற்று வரும் அல்முஜ்தமஃ சஞ்சிகையாகும். பேட்டியின் முக்கியமான சில பகுதிகளை வாசகர்களுக்காகத் தருகிறோம். நேர்காணல்: ஸலாஹ் அப்துல் மக்ஸூத்

* இஹ்வான் இயக்கத்தினதும் எகிப்தினதும் வரலாற்றில் இது முக்கியமான தொரு காலகட்டம். இந்த வகையில் இஹ்வான்களின் புதிய தலைமை என்னென்ன விடயங்களை முதன்மைப்படுத்தி நோக்குகின்றது?

இஹ்வான்களைப் பொறுத்த மட்டில் மக்களை ஈமான், அகீதா ரீதியில் ஒன்றுபடுத்துவதும், அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அன்பு கொள்ளச் செய் வதும்தான் முக்கிய பணி. அத்தோடு, எகிப்தியர்களது தாயகத்தை மீட்டெடுக்கும் பணிக்காக எகிப்தியர்களை ஒன்றுபடுத்துவதிலும், அதற்காக உழைப்பவர்களோடு கூட்டுச் சேர்ந்து செயற்படுவதிலும் நாம் கவனம் செலுத்துவோம். அது மாத்திரமின்றி முழு மொத்த முஸ் லிம்களையும் அவர்கள் எந்த சிந்தனைப் பிரிவைச் சார்ந்திருந்த போதும் இஸ்லாமியப் பணிக்காக ஒன்றிணைக்கும் வேலையிலும் நாம் கவனம் செலுத்துவோம்.

இயக்கத்தைப் பொறுத்தமட்டில், அதன் சமீபத்திய நகர்வுகள் பற்றி பலரும் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். இவர்களை இணைக் கும் பணியை யும் செய்ய வேண்டும். நான் இவர்களிடம் "நீங்கள் இயக்கத் துக்குள் இருந்தவாறு உபதேசங்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்" என்று கூற விரும்புகி றேன்.

நாம் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொண்டால்தான் இமாம் விடும் தவறுகளை எம்மால் திருத்த முடியும். எந்தெந்த விடயத்தை முதன்மைப் படுத்த வேண்டுமென்ற பிக்ஹுல் அவ்லவிய்யாத் தையும் நாம் தொழுகையில் கற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக, இமாம் தொழுகையின் போது நடு அத்தஹிய்யாத் இருப்பை மறந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நாம் அவரைத் திருத்த வேண்டும். இதைனைக் கவனியாத இமாம் தொடர்ந்தும் அடுத்த கட்ட நகர்வை மேற்கொண்டால் நாமும் அவ்வாறே செய்ய வேண்டும். இப்படியாக அவர் தொடர்ந்தும் தவறிழைத்துக் கொண்டிருந்தாலும் அவரைத் திருத்த வேண்டும்.

இன்னுமொரு உதாரணத்தைச் சொல்வதாயின், இமாம் ஒரு ரக்அத்தைக் கூடுதலாகத் தொழுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நாம் அவரைத் திருத்த வேண்டும். அவர் அதனைக் கவனியாது எழுந்து தொழுதால், நாம் அத்தஹிய்யாத் இருப்பிலேயே இருந்துவிட்டு, இமாம் மீண்டும் எம்முடன் வந்து சேர்ந்ததும் அவருடன் சேர்ந்து ஸலாம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் தான் நீங்கள் கட்டுப்பாடு மிக்க உண் மையான படை வீரராக இருப்பீர்.

எப்போதும் கட்டுப்பட வேண்டிய விடயங்களில்தான் கட்டுப்பட வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயங்களில் ஒரு போதும் கட்டுப்படக் கூடாது.

* கதீபா, முஅஸ்கர், ரிஹ்லா என்ற தர்பிய்யா வழிமுறைகளை இஹ்வான்கள் கொண்டிருக்கின் றனர். இன்று பாதுகாப்புச் சிக்கல்களும் இருப்பதனால் வேறு ஏதும் வழிமுறைகளையும் இயக்கம் பின்பற்றுகிறதா?

"அறிவு முஃமினின் தொலைந்து போன சொத்து. அவன் அதனை எங்கு கண்டாலும் எடுத்துக் கொள் வான்." இங்கு அறிவு என்பது பொருத்தமான இடத்தில் பொருத்த மான பொருளை வைப்பதாகும். எம்மிடம் சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை நாம் எப்படியேனும் நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். வாராந்தம் நடை பெறும் எமதுஉஸ்ராமுறைமை தவிர்க்க முடியாத ஒன்று. இது நடைமுறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வழிமுறையும் கூட. தஆருஃப், தபாஹும், தகா புல் என்ற மூன்று அடிப்படைகளில் நகர்ந்து செல்லும் இந்த முறைமையை உருவாக்கிய இயக்க ஸ்தாபகர் இமாம் ஷஹீத் ஹஸனுல் பன்னா எதிர்பார்த்த விளைவுகளை இதற்கூடாக நாம் நிதர்சனமாகக் காண்கிறோம்.

முஸ்லிம் வீடுஎன்ற படித்தரமும் இஹ்வான்களின் அபிவிருத்திப் படிமுறையில் முக்கியமான தொருகட்டம். இங்கு பயிற்றுவிக்கப்பட்டு, பண்படுத்தப்பட்ட தனிநபர்கள் இருப்பர். இந்தப் படித்தரத்தைத் தொடர்ந்து வீடு, சமூகம்... என்றவாறு படித்தரங்கள் விரிந்து செல்கின்றன.

தனிநபர் உருவாக்கத்திற்கான வழிமுறைகள் எமக்குத் தடைப்பட் டுப் போகும் சந்தர்ப்பங்களில் இன்னும் பல வழிமுறைகளை அல்லாஹ் எமக்குக் காட்டித் தரு வான். இந்த வகையில் நவீன இலத்திரனியல் ஊடகங்களையும் நாம் பயன்படுத்தி வருகிறோம்.

ஃபேஸ்புக், டியூடர் போன்ற நவீன இலத்திரனியல் தொடர்பூட கங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். இன்று பல முஸ்லிம்கள் இஸ்லாமிய சிந்தனை யையும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களையும் பரப்புவதில் இந்த நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

* எகிப்திய இஹ்வான்கள் பலஸ்தீனுக்காக கடுமையாக உழைக்கின்றனர். தமது சொத்து செல்வங்களையும் அதற்காக அர்ப்பணிக்கின்றனர். சிலபோது அதற்காக இராணுவ விசாரணை களுக்கும் உட்படுகின்றனர். இது இப்படியி ருக்க, ஏனைய அறபுகளதும் முஸ்லிம்களதும் கடமை என்ன? எகிப்திய சமூகத்தின் முயற்சிகள் மாத்திரம் போதுமானவையா?

இஹ்வான்கள் பலஸ்தீனுக்காக உழைக்கின்றபோதும், இன்னும் அதிகமாக நாம் முயற்சி செய்ய வேண்டும். எமது செல்வங்களை அதற்காக செலவழிக்க வேண்டும். பலஸ்தீன விவகாரம் நிறைய சுமை களைக் கொண்டிருந்த போதும் நம்பிக்கை தரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின் றன. நிச்சயமாக பலஸ்தீன் வெற்றி பெறும் இன்ஷா அல்லாஹ். சியோ னிஸத்தை யும் அதற்கு உதவிய வர்களையும் அல்லாஹ் இழிவு படுத்துவான். பலஸ் தீனுக்கு உத வாது, எதிரிகளோடு கைகோர்த்தி ருந்து, அவர்களது திட்டங்களை செயற்படுத்துவதில் உதவியாக இருந்த முனாஃபிக்குகளையும் அல்லாஹ் தண்டிப்பான்.

* சென்ற தடவை போன்று எதிர்வரும் தேர்தலிலும்இஸ்லாம் ஒன்றே தீர்வுஎன்ற கோஷத்தின் கீழ்தானா இஹ் வான்கள் செயற்படுவார்கள்?

ஆம், இது அடிப்படையான தொரு கோஷம். இதனை மக்களுக்குப் புரியவைப் பதுதான் இங்கு முக்கியம். சிலர் இந்தக் கோஷத்தைக் காட்டி மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர். இப்படியானவர்கள், "இஹ்வான்கள் வெற்றியடைந்தால் கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டி வரும். கிறிஸ்தவர்கள் பலவந்தத்துக்கு உட்படுத் தப்படுவர்" என்றெல்லாம் கூறி வருகின்றனர். இது மிகப் பெரும் தவறாகும்.

சில முஸ்லிம்களும் கூட இந்தக் கோஷத்தை சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. அதாவது, நாம் இஸ்லாமியத் தண்டனைகளை மாத்திரம் நிறைவேற் றுபவர்களாக இருப்போம் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், எமது மார்க்கம் தண்டனைகளை மாத்திர மல்ல, அழகிய பண்பாடுகளையும் கொண்டி ருக்கின்றது.

வாரிசுரிமைச் சட்டத்தை எடுத்துக் கொண்டால், அது முஸ்லிம் களுக்கு மாத்திரம் உரியதொன் றல்ல. சில கிறிஸ்தவர்கள் கூட தமது மரணத்தின் பின் சொத்துக் கள் இஸ்லாமிய ஷரீஆவின் பிரகா ரமே பிரிக்கப்பட வேண் டும் என்று மரண சாசனம் எழுதியுள்ளனர்.

* இறுதியாக இஹ்வான்களுக் கும் எமது வாசகர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இன்றைய மனிதர்களுக்குத் தேவையானதொரு தூதை நீங்கள் சுமந்திருக்கிறீர் கள். பௌதீக ரீதியில் அபரிமித வளர்ச்சி கண்ட நாரிகங்கள் கூட இந்தத் தூதின் பாலான தமது தேவையை உணர்ந் துள்ளன.

முஸ்லிம்களே! நீங்கள் உங்க ளது கைகளில் நேர்வழியின் விளக் குகளைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த மார்க்கத்தை அழகிய முறையில் உல குக்கு எடுத்துக் காட்டுங்கள். இந்த உலகு இந்த மார்க்கத்தின்பால் தேவை கொண்டுள்ளது.

எம் முன்னோர் அழகிய பண்பாட்டு நடத்தைகள் மூலம் இந்த உலகுக்கு இஸ்லாத்தை வழங்கி னர். நீங்களும் இஸ்லாத்தை செயற் படுத்திக் காட்டி, இந்த உலகுக்கு அதனை வழங்குங்கள். நீங்கள் சுமந்திருக்கும் மார்க்கம் அல் லாஹ்வுடையது. நீங்கள் அழைப்பு விடுக் கும் மார்க்கம் அல்லாஹ்வுடையது. எனவே, அந்த அல்லாஹ்வுக்காக மனிதர்களை நேசியுங்கள்.

எப்போதும் ஓடும் நீரைப் போல் வாழுங்கள். அது தன்னிலும் சுத்தமாக இருக்கும். பிறரையும் சுத்தப்படுத்தும். அல்லாஹ் எங்க ளையும் உங்களை யும் அப்படியே ஆக்கட்டும். அவன் எங்களைப் பொருந்திக் கொண்ட நிலை யில் அவனை சந்திப்போம். அல்லாஹ் உங்களுக்கும், உங்களது பிள்ளைகளுக் கும், மனைவிமார்களுக்கும் அருள்பாலிக்கட்டும். உங்கள் மூலம் இஸ்லாத்துக் கும் முஸ்லிம் களுக்கும் பிரயோசனமளிக்கட்டும். ஆமீன்.

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்



நன்றி: மீள்பார்வை
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவக்குரல்

________________________________________________________________________

பயணம்
ஆன்மீக அமர்வுகளுக்கான இதழ்
வைகறை
இஸ்லாமிய குடும்ப சஞ்சிகை
சர்வதேச பார்வை
சர்வதேச விவகாரங்களுக்கான இஸ்லாமிய இதழ்


NewsView
ஒரு புதிய பார்வை


Tamilish

Tuesday, November 24, 2009

குழந்தை வளர்ப்பு அவதானங்களும் சில குறிப்புகளும்

குழந்தை வளர்ப்பு என்பது குறித்து இன்று மிக அதிகமாக பேசப்படுகின்றது. அது பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுப்பதற் கில்லை. ஏனெனில் இன்றைய குழந்தைகள்தான் நாளைய சமூகத்தின் வழி காட்டிகளாக திகழப் போகின்றார்கள்.

இன்றைய குழந்தைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வித்தியாசமானவை. அவர்கள் வாழ்கின்ற சூழலில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கவேண் டிய நிர்ப்பந்த நிலை அவர்களுக்கு இருக்கின்றது. எனவே, அவர்களுக்கு வழி காட்டுவதில் சில பெற்றோர் தவறிழைத்து விடுகின்றனர். இதனால் குழந்தை கள் தமது இளவயதிலேயே உள நெருக்கடிக்கு உட்படுகின்றனர்.

இஸ்லாம் குழந்தை வளர்ப்புக்கு தேவையான, போதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. ஆனால், நவீன உலகில் குழந்தை வளர்ப்பிற் கென பல புதிய கோட்பாடுகளும் சிந்தனைகளும் காணப்படுகின்றன. இவை தனி மனிதர்களா லும் நிறுவனங்களாலும் வடிவமைக்கப்பட்டவை. இவற்றை பின்பற்ற முனை யும் முஸ்லிம் பெற்றோர் மது குழந்தைகளை தமது கைகளாலேயே அழித்துவிடும் துரதிஷ்டமான செயலைத்தான் செய்கின்றனர்.

இன்றைய நவீன உலகின் தாக்கங்கள் எமது குழந்தைகளின் நடத்தைகளிலும் செயற்பாடுகளிலும் வெளிப்படுவதை நாம் அன்றாடம் அவதானித்து வருகின் றோம். சில போது சில செயல்களினால் அதிர்ச்சியடைகின்றோம். அவற்றிற்கு தீர்வு சொல்ல முடியாதுதவிக்கிறோம். சிலபோது நாமே தீர்வுகளைத் தேடப் போய் குழந்தைகளை வழிகேட்டின்பால் இட்டுச் சென்றுவிடுகின்றோம்.

இன்று குழந்தைகள் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய பிரச்சினை அவர்களுக்கும் பெற்றோர்களுக்குமிடையிலான உறவாகும். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டும். அவர்கள் சிறந்த முறையில் கற்றுத் தேற வேண்டும், உயர் பதவிகளைப் பெற வேண்டும் போன்ற நோக்கங்களுக் காக செயற்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு இயல்பாக தேவைப்படுகின்ற பல விடயங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றன.

கல்விக்காக வேண்டி சிலபோது பெண் பிள்ளைகளையும் வீட்டிற்கு வெளியே இரவில் அனுப்பக்கூடிய நிலை காணப்படுகின்றது. அவர்கள் போக்குவரத்து செய்வதிலும் வீட்டுக்கு திரும்பி வருவதிலும் பல்வேறு நெருக்கடிகளை அனுபவிக்கின்றனர். அவற்றை கவனத்திற்கொள்ள பெற்றோர் தவறி விடுகின் றனர்.

இன்று பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் காணப்படுகின்ற பல் வேறு பிரச்சினைகளுக்கான சில முக்கிய காரணங்கள் ஆய்வுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

1. பெற்றோருக்கு குழந்தைகளுடன் இருப்பதற்கான நேரமின்மை.

2. பொருளாதார நெருக்கடி (இதன் காரணமாக நீண்ட நேரம் தொழில் செய்ய வேண்டி ஏற்படுகிறது. வீட்டுக்கு வரும்போது குழந்தைகள் உறங்கியிருப்பர். மீண்டும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகள் உறக்கத்தில் இருப்பர்)

3. குழந்தைகளுடன் உரையாடல், கலந்துரையாடல் போன்றவற்றை மேற்கொள் ளாதிருத்தல்.

அண்மையில் பாடசாலையொன்றில் ஆண்டிறுதிப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் பரீட்சையில் மொழிப் பாடத்திற்காக வழங்கப்பட்டி ருந்த வினாத்தாளில் பின்வரும் வினா கேட்கப்பட்டிருந்தது. பிள்ளைகளின் மீதுள்ள பெற்றோரின் கடமையும் பெற்றோரின் மீதுள்ள பிள்ளைகளின் கட மையும் பற்றி பத்து வரிகள் எழுதுக.

இவ்வினாவிற்கு விடையளித்த 80% இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு கூறியிருந்தார்கள்: குழந்தைகள் மீதுள்ள பெற்றோரின் கடமை அவர்களுக்கு கல்வி புகட்டுவதும் அதனை மீட்டச் செய்வதுமாகும். பெற்றோர் மீது பிள்ளை களுக்குள்ள கடமை சிறந்த முறையில் கற்று அவர்களை மகிழ்ச்சிப்படுத்து வதாகும்.

இவ்விடை மூலம் இன்று பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமி டையில் காணப்படுகின்ற உறவு கல்வியுடன் சுருங்கியிருப்பதை தெளிவாக உணர முடிகின்றது. குழந் தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஏனைய உரிமைகளில் பெற்றோர் கவனயீனமாக இருக்கின்றனர்.

இஸ்லாம் குழந்தைகளுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதை கடமையாக்கி யுள்ளது. அத்துடன் நீச்சல் போன்ற விளையாட்டுக்களையும் பயிற்றுவிக்கு மாறு ஊக்குவித்துள்ளது. அவர்களுக்கும் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்க ளுக்கு மிடையிலான உறவையும் அயலவர் களுக்கிடையிலான உறவையும் ஏற்படுத்துமாறு கூறியிருக்கின்றது. ஆனால், இந்நிலமைகளை இன்று காண முடியாதுள்ளது.

பெரும்பாலான குழந்தைகளுக்கு தமது பெற்றோரை தவிர வேறு உறவுக ளைத் தெரியாது. சிலவேளை பாடசாலை பாடங்களை கற்றுக் கொடுக்கவரும் ஆசிரியரை அதிகமாக தெரிந்திருக்கும். அவர்தான் வீட்டிற்கு வரும் ஒரே யொரு விருந்தாளியாக இருப்பார்.

இதனால் குடும்பம் சமூகத்திலிருந்தும் ஏனைய குடும்பங்களிலிருந்தும் ஒதுக்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு சமூகத்துடன் உரையாடுவதற்கான, பழகு வதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. அவர்களுக்குள் ஏக் கம் குடிகொண்டிருக்கின்றது. அவர்கள் சிறுவயதிலேயே நோயாளிகளாக மாறி விடுகின்றனர். சிறியதொரு தடிமலிலும் அவர்கள் சோர்ந்துவிடுகின் றனர்.

இங்குதான் இஸ்லாம் வழிகாட்டியுள்ள குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் தெளிவாகின்றது. குழந்தைகளின் உலகம் விசாலமானது. அவர்களின் கனவுக ளும் விசாலமானது. அவர்கள் அடைய விரும்புகின்ற இலக்குகளும் உயர்ந் தது. ஆனால் அவற்றை நாம் எமது விருப்புக்களினால் சுருக்கிவிடுகின்றோம். அல்லது அழித்துவிடுகின்றோம்.

நாம் வரலாற்றில் மிக இள வயதில் சாதனைகள் செய்த பலரை கண்டிருக் கின்றோம். இன்றும் கண்டு வருகின்றோம். ஆனால், எமது பிள்ளைகள் அந்த சாதனையாளர்களில் ஒருவராக வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் நவீன முறைகளால் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். எனவே, எமது குழந்தைகளை ஆளுமையுள்ளவர்களாக வளர்த் தெடுப்பதற்கு பின்வரும் விடயங் களில் நாம் இதன்பிறகாவது கவனம் செலுத்த வேண்டும்.

1. அல்குர்ஆன், ஸுன்னா கற்றுத் தருகின்ற பயிற்றுவிப்பு முறைகளை தேடி கற்க வேண்டும்.

2. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

3. குழந்தைகளின் எல்லா வளர்ச்சிக்கட்டங்களிலும் மார்க்கக் கல்வியை கற்பிப்பதற்கு மறக்கக் கூடாது.

4. குடும்ப உறவினர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துதல், அவர்களை அடிக்கடி சந்தித்தல்.

5. குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகளை, விளையாட்டுக்களை கற்றுக் கொடுத்தல்.

6. குழந்தைகளுடன் இருப்பதற்காக ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுதல்.





நன்றி: மீள்பார்வை
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவக்குரல்

- - - - -

பயணம்
ஆன்மீக அமர்வுகளுக்கான இதழ்
வைகறை
இஸ்லாமிய குடும்ப சஞ்சிகை
சர்சதேச பார்வை
சர்வதேச விவகாரங்களுக்கான இஸ்லாமிய இதழ்


NewsView
ஒரு புதிய பார்வை

Saturday, August 1, 2009

டார்வினிசம்

டார்வினிசம் என்பது அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கிய பண்டைய ஷாமன மதம். ஷாமன மாதம் 50,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

ஷாமன மதம் மழை, புயல், மின்னல், காற்று, மற்றும் சூரியன் போன்ற இயற்கை சக்திகளை வழிப்படும் முறையை கொண்டது. டார்வினிசம் என்பதும் இய
ற்கையை வழிப்படும் ஒருவகை மதம். அது இயற்கையை அற்புதமான சக்திகளை கொண்டது என்று வர்ணிக்கிறது. அது கல், பூமி, சூரியன், மின்னல் மற்றும் காற்று ஆகியவை இணைந்து உயிரினங்களை உருவாக்கியது என்று நம்புகிறது.

ஷமனர்கள் அவர்கள
து சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இரகசியங்கள் தெரியும் என்றும் எதிர்காலத்தையும் கூற முடியும் என்றும் கூறினர். டார்வினிஸ்டுகளும் அதை போன்று அணு மற்றும் பூமி, பொருளின் இரகசியம் தங்களுக்கு தெரியும் என்றும் எதிர்காலத்தில் மனிதர்களும் இயற்கையும் மாற்றமடையும் கற்பனை சிந்தனையை விளக்குகின்றனர்.

வானியல், உயிரியல், பௌதீகவியல், புவியியல், கருவியல் போன்ற அனைத்தும் விஞ்ஞானம். ஆனால் டார்வினிசம் என்பது விஞ்ஞானமல்ல, அது பண்டைய ஷமன மதமாகும்.

டார்வினிஸ்டுகளின் தற்போதய நம்பிக்கை முற்காலத்தில் முதலைகளை வணங்கியவர்களின் நம்பிக்கையை போன்றது. டார்வினிஸ்டுகள் தற்செயலாக, அசைவற்ற, உணர்வற்ற அணுக்களை உருவாக்கும் சக்தியாக கருதுவதால், மதத்தை நம்புவதை போன்று அதை நம்புகின்றனர்

பரிணாம வளர்ச்சி கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், விஞ்ஞான கிளைகளில் (உயிரியல், பௌதீகவியல்) ஏற்பட்ட முன்னேற்றம்
ஒன்றன் பின் ஒன்றாக அக்கோட்பாட்டின் கருத்துகளை வேரறுத்து விட்டது. இருப்பினும் இன்றும் டார்வினிசம் சீடர்களை கொண்டுள்ளது. பொதுவாக ஒரு விஞ்ஞான கருத்து பிழையென நிரூபிக்கப்பட்டவுடன், அது ஒதுக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய விவாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் அனைத்தும் நிறத்தப்பட்டுவிடும். ஆனால் டார்வினிசத்தில் அவ்வாறு நிகழவில்லை. டார்வினிஸ்டுகள் தங்களது கோட்பாட்டிற்கு எதிரான கருத்துகள் மறுக்க முடியாது வலுப்பெற்றிருந்த போதிலும் டார்வினிஸ்டுகள் அதை புறந்தள்ளி விட்டு தொடர்ந்து அவர்களுடைய நம்பிக்கையை நிலைநாட்ட கடுமையாக முயற்சிக்கின்றனர்.

நெருப்பு, நட்சத்திரங்கள், சூரியன் போன்றவற்றை வணங்குவது, பிரமிட்டுகள் வேற்று கிரகவாசிகளால் கட்டப்பட்டது என்று நம்புவது, சில குறிப்பிட்ட மிருகங்களை புனிதமாக கருதுவது விஞ்ஞானமல்ல. அதே போன்று டார்வினிசமும் - மற்ற மூடநம்பிக்கை காரணமாக, டார்வினிசமும் சிலைகள் மற்றும் பொய்யான கடவுள்களை கொண்ட மதமாகும்.

டார்வினிஸ்டுகளின் மிக முக்கிய சிலை தற்செயல் என்ற சிலையாகும். டார்வினிஸ்டுகளின் எந்த ஒரு புத்தகத்தை நீங்கள் வாசித்தாலும், அதில் டார்வினிஸத்தின் உயிர்நாடியான - இயற்கை தெரிவின் எல்லையற்ற சக்திகளை அறிந்து கொள்வீர்கள்.

தற்செயல் என்ற சிலை செய்யும் அனைத்து செயல்களும் மிகச்சரியாக கணக்கிடப்பட்டுள்ளது என்று பரிணாமவாதிகள் கூறுகின்றனர். அவர்களுடை
ய பார்வையில் அந்த சிலை நிகழ்த்தப் போகும் அனைத்து செயல்களையும் ஏற்கனவே நன்கு திட்டமிட்டு கணக்கிட்டுள்ளது.

பரிணாமவாதிகள் ஒரு வசித்திரமான சக்தியில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் பொருளுக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுக்கின்றனர். முற்காலத்தில் பொருள் தன்னை இணைத்து ஒரு உயிருள்ள செல்லாக உருவானது. பிறகு அது முற்றிலும் வித்தியாசமான இன்னொன்றை உருவாக்கியது என்று நம்புகி
ன்றனர். விஞ்ஞானம் இத்தகைய சிந்தனைகளை மறுக்கிறது. ஆனால் டார்வினிஸ்டுகளை பொருத்தவரையில் அவை மறுக்க முடியாத உண்மைகள் என்றும் அதை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

டார்வினிஸம் என்பது மடமையான, பகுத்தறிவிற்கு முரணான, பிழையான பண்டைய ஷமன மதமாகும். இந்த சிலை வணக்கம் இஸ்லாத்தை எதிர்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

டார்வினிச ஷமன மதத்தை பொருத்தவரையில் நிலம், நீர், பாறை மற்றும் கல் அனைத்தும் உணரும், கேட்கும், நிறங்களை பார்க்கும் சக்தி படைத்தவை
.

டார்வினிச மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான தற்செயல் எனும் மடமையான நம்பிக்கையானது விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் எதிரானது. உண்மையில் எந்த ஒரு பகுத்தறிவுள்ள சிந்தனையும் மிக சிக்கலான ஒரு அமைப்பு தற்செயலாக உருவாக முடியாது என்பதை ஏற்று கொள்ளும். அதற்கு மாறாக அவ்வாறு சிக்கலான அமைப்பு உருவாவதென்றால் நிச்சயமாக அதில் அறிவார்ந்த ஒரு பெரும் சக்தியின் திட்டம் இருந்துள்ளது என்பது புலனாகிறது. இருப்பினும் தங்களது கைகளால்
சிலைகளை வடிவமைத்து அதற்கு பெயர் சூடி அதற்கு உண்ண உணவு கொடுத்து பின்பு அதை வணங்குபவர்களை போன்று டார்வினிஸ்டுகளும் பொய்யான கடவுள்களில் நம்பிக்கை வைத்தள்ளனர்.

டார்வினிஸ்டுக்ள ஏற்று கொண்ட மடமையான நம்பிக்கை பண்டைய பல தெய்வ வணங்கிகளின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையோடு தொடர்புபட்டுள்ளது. பண்டைய பல தெய்வ வணங்கிகள் அசைவற்ற சிலைகள் தான் அனைத்தையும் படைத்தன என்று நம்பினார்கள். அதை போன்று தான் பரிணாமவாதிகள் அசைவற்ற பொருள் அனைத்து உ
யிரினங்களையும் படைத்துள்ளன என்று நம்புகின்றனர். (நிச்சயமாக இறைவன் இதை விட்டும் தூயவன்). அவர்களது உடலும் பல தற்செயலான செயல்களால் உருவானது என்று வாதிடுகின்றனர்.

டார்வினிச ஷாமன மதத்தை விஞ்ஞானம் என்ற போர்வையில் மாணவர்களுக்கு கற்பிப்பது ஏற்று கொள்ளமுடியாதது. இந்த ஷாமன மதத்திலிருந்து விடுப்பட்ட உயிரியலே அவர்களுக்கு தேவை.

துருக்கி பொது மக்கள் அவர்களது நாட்டிலுள்ள பரிணாமவாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளை எள்ளி நகையாடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களால் பரிணாம வளர்ச்சி திட்டத்தை ஆக்ரோஷமாகவும் பிழையாகவும் நிறுவ முடியாமையாகும். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை அவர்கள் சமர்பிக்க வேண்டும், அதன் மூலம் அனைவரும் அவற்றை ஆராயந்து சரியானவைகளையும் பிழையையும் பிரித்தரிய முடியும். நாடு முழுவதும் காண்பிக்கப்பட்ட படிமங்கள் மூலம் உயிரினங்கள் பரிணாமம் அடையவில்லை என்பதை துருக்கி மக்களை உணர்ந்து கொண்டனர்.

பரிணாமவாதிகளிடம் படிமங்கள் ஏதாவது இருப்பின் அவற்றை பொது காட்சிக்கு வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றையாவது மத்திய நிலையங்கள் அல்லது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். அவர்களால் முடியாவிட்டால் அவர்களது முட்டாள்தனமாக பரிணாமத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். மக்களிடம் காண்பிக்க அவர்களிடம் இடை நிலை படிமங்கள் இல்லை. ஏனெனில் அத்தகையவைகள் ஒருபோதும் தோன்றவில்லை.

பரிணாமத்தை நிரூபிப்பதற்காக பரிணாமவாதிகள் முன்வைத்த ஒவ்வொரு படிமமும் பொய்யானவை அல்லது பிழையாக உபயோகிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பில்டவுன் மனிதன் என்பது கட்டுக்கதையானது. நேப்ரஸ்கா மனிதனின் பல் கரடியின் படிமத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அழிந்து போன உயிரினம் என்று கூறப்பட்ட கொல்கான்ந்த் என்ற மீன் உயிருடன் பிடிப்படடு 1938 முதல் மாற்றமடையாமல் இருக்கிறது. மனித பரிணாமம் என்ற கட்டுக்கதைக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் இன்றைய மனிதனுடையது அல்லது அழிந்து போன குரங்கு இனத்துடையது என்பது நிரூபணமாயுள்ளது.

பரிணாமவாதிகள் ஒரு போதும் தோன்றியிராத உயிரினங்களை கற்பனை செய்து ஓவியர்களை வாடகைக்கு அமர்த்தி புதிய அமைப்புகளை வரைந்து அவற்றை கொண்டு பரிணாம வளர்ச்சி என்பது விஞ்ஞான உண்மை என்பதாக மக்களை நம்ப வைக்க முற்படுகின்றனர். இந்த பொய்யான தகவல்கள் பத்திரிக்கைகளில், சஞ்சிகைகளில் மற்றும அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதை அதனை உருவாக்கியவர்களின் கற்பனை தவிர வேறில்லை. இவற்றை படிமங்களில் காண முடியவில்லை. பரிணாமவாதிகள் அவர்களின் கைகளால் படைக்கபட்ட பொய்யான தகவல்களில் இறுதியாக விழுந்து இந்த பொய்யான டார்வினிச மதத்தை நம்புகின்றனர்.

டார்வினிஸ்டுகளின் ஷாமன மத கருத்துகளை விஞ்ஞானம் மறுக்கிறது.


டார்வினிச ஷாமன மதம் கூறுகிறது

நவீன விஞ்ஞானம் கூறுகிறது.

முதல் உயிரினம் தற்செயலாக உருவானது

உயிரினங்கள் தற்செயலாக உருவாக முடியாது. ஒரு தனி புரதமோ அல்லது ஒரு சாதாரண செல் அல்லது முழு உயிரினமும் தற்செயலாக உருவாகவே முடியாது என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு புரதம் தற்செயலாக உருவாவது என்பது 10950 இல் 1 என்ற சாத்திய வீதத்திலாகும். நடைமுறையில் இது பூஜ்ஜிய சாத்திய வீதமாகும். அதாவது ஒருபோதும் நிகழாது.
உயிரினங்கள் முன்னைய அபிவிருத்தி அடையாத மூதாதையரிலிருந்து தோன்றியது

ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் தோன்ற முடியாது. ஓவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குறிய தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் படிப்படியாக மாற்றமடைந்து ஒரு புது உயிரினமாக தோன்ற முடியாது

படிமங்கள் பரிணாம வளர்ச்சி திட்டத்தை உறுதிப்படுத்துகிறது

படிமங்கள் பரிணாம வளர்ச்சியை மறுத்து அனைத்தும் படைக்கப்பட்டன என்பதை காட்டுகிறது. சுமார் 1000 லட்சம் படிமங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் முழுமையடைந்த நன்கு அபிவிருத்தியடைந்தை காட்டுகின்றன. ஒரு படிமத்தில் கூட அது பரிணாமம் அடைந்ததற்கான எந்த சான்றும் இல்லை

மாற்றங்கள் மூலம் பல உயிரினங்கள் தோன்றின

மாற்றங்கள் உயிரினங்களை அழிக்குமே தவிர அதை வேறொரு உயிரினமாக மாற்றாது. அவ்வாறு மாற்றமடைந்தால் அந்த உயிரினம் அழிந்துவிடும் அல்லது முடமாகிவிடும்

மனிதன் குரங்கு போன்ற உயிரினங்களிலிருந்து பரிணாமம் அடைந்தான்

மனிதனும் குரங்கும் மிகவும் வித்தியாசமான உயிரினங்கள். அவற்றுக்கிடையே எந்தவித குடும்ப ஒற்றுமையும் கிடையாது. உருவ ஒற்றுமை இருந்த போதிலும் அவற்றுக்கிடையே மலையளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என்றும் அவற்றை பரிணாமத்தை கொண்டு விளக்க முடியாது

இயற்கையில் காணப்படும் இயற்கை தெரிவு பரிணாமத்திற்கான சான்று

இயற்கை தெரிவு மூலம் பரிணாமமோ அல்லது வேறொரு புது உயிரினமோ தோன்ற முடியாது


பரிணாமவாதிகளின் இரண்டு பொய்கள்: டிக்டாலிக் ரோசியா மற்றும் குகுனாசஸ்

சில மாதங்களுக்கு முன் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டு டிக்டாலிக் ரோசியா என்று பெயரிடப்பட்ட இந்த படிமம் பரிணாம வளர்ச்சிக்கு பெரும் சான்றாக பிரச்சாரம் செய்யப்பட்டது. உண்மையில் இந்த உயிரினம் பல உயிரினங்களின் பண்புகளை கொண்ட மொசாயிக் உயிரினமாகும். இருப்பினும் பரிணாமவாதிகள் பிழையான படங்களை காட்டி இது நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைந்தது என்பதை நிரூபிப்பதற்காக இந்த உயிரினத்தை இடை நிலை உயிரினம் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இன்று அவுஸ்திரேலியாவில் காணப்படும் பிளாடிபஸ் என்ற உயிரினம் இதை போன்ற மொசாயிக் இன உயிரினமாகும். மோசாயிக் உயிரினம் என்பது மிருகங்கள், ஊர்வன மற்றும் பறவைகளின் பண்புகள் ஒரே நேரத்தில் ஒரு உயிரினத்தில் இணைந்து காணப்படுவதாகும். இதை பரிணாமத்திற்கான சான்றாக கொள்ள முடியாது.
சில நாட்களுக்கு முன்னர் பல வருடங்களாக விடுபட்ட இடை நிலை என்ற அவர்களின் கற்பனை கதைக்கு உயிரூட்ட பரிணாமவாதிகள் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு படிமத்துடன் வந்துள்ளனர். குகுனாசஸ் என்ற இந்த புதிய படிமம் உண்மையில் அழிந்து போன ஒரு வகை மீன் இனமே தவிர பரிணாமத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதன் வால் பக்கத்தில் முள் இருப்பதால் அதை பரிணாமவாதிகளின் நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைந்த கட்டுக்கதைக்கான சான்றாக உபயோகிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் படிமத்திலுள்ள உயிரினம் நில உயிரினங்களுடன் முற்று முழுதாக தொடர்பில்லாமல் இருக்கிறது. இன்றும் உயிருடன் இருக்கும் கொலகொன்ந்த் இன மீன்களுக்கு வால் பக்கத்தில் முள் இருக்கிறது. இருப்பினும் இது மீனின் உடலிலுள்ள சாதாரண அமைப்பு என்றும் நீந்துவதற்கு மட்டுமே இதை உபயோகிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பரிணாமவாதிகள் அவர்களின் கற்பனைகளை நிரூபிப்பதற்கு பாதி விருத்தியடைந்த ஆனால் முற்று முழுதாக இயங்க முடியாத இடைநிலை அமைப்புகளை (iவெநசஅநனயைவந கழசஅள) கண்டுபிடிக்க வேண்டும். இருப்பினும் இந்த படிமங்களிலுள்ள உயிரினங்களின் உறுப்புகள் ஒவ்வொன்றும் குறைபாடுகளற்ற முற்று முழுதாக விருத்தியடைந்து காணப்படுகிறது. அங்கு பாதி விருத்தியடைந்த உறுப்புகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. படிம வரிசையில் ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் பரிணாமம் அடைந்ததற்கான எந்த சான்றும் இல்லை.
பரிணாமவாதிகள் தங்களது பிழைகளை ஏற்று கொண்டு பொது மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட வேண்டும்.

சுயநல பரிணாமவாதிகளின் புதிய சதி வலைகள்

சமீப காலமாக துருக்கி மற்றும் உலக மீடீயாக்களில் உலகலாவிய ரீதியில் டார்வினிசத்தின் தோல்வியை பற்றி அதிர்ச்சி செய்திகளை வெளியிட்டுள்ளன. பரிணாமம் தோற்கடிக்கபட்டமை ஜரோப்பிய ப்ரீ மேசன் மற்றும் இதர இரகசிய சக்திகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவைகள் நாத்திகம் தோற்கடிக்கபட்டு விடும் என்ற பயத்தில் பெரும் சதிவலை பின்னுகின்றன. பிரித்தானிய மற்றும் பிரஞ்சு செயலில் இறங்கியுள்ளன. பழிதீர்பதற்காக சபாதிய குடும்பங்கயுளும் இதில் ஈடுபடுகின்றன. பல எழுத்தாளர்கள் வாடகைக்கு அமர்தப்பட்டு பெரும் சதி செய்யப்படுகிறது. இதில் முக்கிய குறியாக கருதப்படுவது விஞ்ஞான ஆய்வு கழகமாகும்.
எதிர்காலத்தில், இறந்த காலத்தை போன்று இவை பலன் தரப்போவதில்லை. மில்லியன் கணக்கான மக்கள் தற்போது நடந்து கொண்டிருப்பவற்றை பார்த்து கொண்டிருக்கின்றனர். ஒரு புதிய சூரியன் உதயமாகிவிட்டது. அதன் ஒளி உலகம் முழுவதும் ஒளியூட்டுகிறது. உண்மையை ஏற்று கொள்வது தான் பரிணாமவாதிகளுக்கு எஞ்சியுள்ள ஒரு விருப்பாகும்.

இஸ்லாம் பல தெய்வ வணக்கங்களை தான் எதிர்கிறது : விஞ்ஞானத்தை அல்ல. விஞ்ஞானத்தின் அனைத்து கிளைகளையும் பரிசோதித்து ஆய்வு செய்யுமாறு மக்களை வற்புறுத்துகிறது :

..............வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து ....... (சூரத் ஆல-இம்றான் : 191)

மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (சூரத் காப்ஃ : 6)

...............(மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்¢ பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்!....... (சூரத் முல்க் : 3)

ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று - வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும - மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? - பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) (சூரத் காஷியா 17-20)

நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன. இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (சூரத் ஜாஸியா 3-4)

ஆகவே விஞ்ஞானத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையில் தொடர்பு இல்லை என்று கூற முடியாது.
இஸ்லாம் பொய்யான மதங்களை எதிர்கிறது. அது நெருப்பு, மிருகங்கள், சிலைகள் - போன்றவற்றை வணங்குவதை எதிர்கிறது. சுருங்க சொன்னால், அனைத்துவித பலதெய்வ கொள்கைகளையும் எதிர்கிறது. ஷாமன மதம் இயற்கையையும் (மிருகங்கள், தாவரங்கள், கற்கள், பூமி, அணு) மற்றும் தற்செயலையும் (change) வணங்குகிறது. டார்வினிசம் ஷாமன கோட்பாடுகளை கொண்டிருப்பதால் அது இஸ்லாத்துடன் மோதுகிறது.

நன்றி: http://www.harunyahya.com/

'Tamilish'