Tuesday, November 24, 2009

குழந்தை வளர்ப்பு அவதானங்களும் சில குறிப்புகளும்

குழந்தை வளர்ப்பு என்பது குறித்து இன்று மிக அதிகமாக பேசப்படுகின்றது. அது பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுப்பதற் கில்லை. ஏனெனில் இன்றைய குழந்தைகள்தான் நாளைய சமூகத்தின் வழி காட்டிகளாக திகழப் போகின்றார்கள்.

இன்றைய குழந்தைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வித்தியாசமானவை. அவர்கள் வாழ்கின்ற சூழலில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கவேண் டிய நிர்ப்பந்த நிலை அவர்களுக்கு இருக்கின்றது. எனவே, அவர்களுக்கு வழி காட்டுவதில் சில பெற்றோர் தவறிழைத்து விடுகின்றனர். இதனால் குழந்தை கள் தமது இளவயதிலேயே உள நெருக்கடிக்கு உட்படுகின்றனர்.

இஸ்லாம் குழந்தை வளர்ப்புக்கு தேவையான, போதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. ஆனால், நவீன உலகில் குழந்தை வளர்ப்பிற் கென பல புதிய கோட்பாடுகளும் சிந்தனைகளும் காணப்படுகின்றன. இவை தனி மனிதர்களா லும் நிறுவனங்களாலும் வடிவமைக்கப்பட்டவை. இவற்றை பின்பற்ற முனை யும் முஸ்லிம் பெற்றோர் மது குழந்தைகளை தமது கைகளாலேயே அழித்துவிடும் துரதிஷ்டமான செயலைத்தான் செய்கின்றனர்.

இன்றைய நவீன உலகின் தாக்கங்கள் எமது குழந்தைகளின் நடத்தைகளிலும் செயற்பாடுகளிலும் வெளிப்படுவதை நாம் அன்றாடம் அவதானித்து வருகின் றோம். சில போது சில செயல்களினால் அதிர்ச்சியடைகின்றோம். அவற்றிற்கு தீர்வு சொல்ல முடியாதுதவிக்கிறோம். சிலபோது நாமே தீர்வுகளைத் தேடப் போய் குழந்தைகளை வழிகேட்டின்பால் இட்டுச் சென்றுவிடுகின்றோம்.

இன்று குழந்தைகள் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய பிரச்சினை அவர்களுக்கும் பெற்றோர்களுக்குமிடையிலான உறவாகும். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டும். அவர்கள் சிறந்த முறையில் கற்றுத் தேற வேண்டும், உயர் பதவிகளைப் பெற வேண்டும் போன்ற நோக்கங்களுக் காக செயற்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு இயல்பாக தேவைப்படுகின்ற பல விடயங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றன.

கல்விக்காக வேண்டி சிலபோது பெண் பிள்ளைகளையும் வீட்டிற்கு வெளியே இரவில் அனுப்பக்கூடிய நிலை காணப்படுகின்றது. அவர்கள் போக்குவரத்து செய்வதிலும் வீட்டுக்கு திரும்பி வருவதிலும் பல்வேறு நெருக்கடிகளை அனுபவிக்கின்றனர். அவற்றை கவனத்திற்கொள்ள பெற்றோர் தவறி விடுகின் றனர்.

இன்று பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் காணப்படுகின்ற பல் வேறு பிரச்சினைகளுக்கான சில முக்கிய காரணங்கள் ஆய்வுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

1. பெற்றோருக்கு குழந்தைகளுடன் இருப்பதற்கான நேரமின்மை.

2. பொருளாதார நெருக்கடி (இதன் காரணமாக நீண்ட நேரம் தொழில் செய்ய வேண்டி ஏற்படுகிறது. வீட்டுக்கு வரும்போது குழந்தைகள் உறங்கியிருப்பர். மீண்டும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகள் உறக்கத்தில் இருப்பர்)

3. குழந்தைகளுடன் உரையாடல், கலந்துரையாடல் போன்றவற்றை மேற்கொள் ளாதிருத்தல்.

அண்மையில் பாடசாலையொன்றில் ஆண்டிறுதிப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் பரீட்சையில் மொழிப் பாடத்திற்காக வழங்கப்பட்டி ருந்த வினாத்தாளில் பின்வரும் வினா கேட்கப்பட்டிருந்தது. பிள்ளைகளின் மீதுள்ள பெற்றோரின் கடமையும் பெற்றோரின் மீதுள்ள பிள்ளைகளின் கட மையும் பற்றி பத்து வரிகள் எழுதுக.

இவ்வினாவிற்கு விடையளித்த 80% இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு கூறியிருந்தார்கள்: குழந்தைகள் மீதுள்ள பெற்றோரின் கடமை அவர்களுக்கு கல்வி புகட்டுவதும் அதனை மீட்டச் செய்வதுமாகும். பெற்றோர் மீது பிள்ளை களுக்குள்ள கடமை சிறந்த முறையில் கற்று அவர்களை மகிழ்ச்சிப்படுத்து வதாகும்.

இவ்விடை மூலம் இன்று பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமி டையில் காணப்படுகின்ற உறவு கல்வியுடன் சுருங்கியிருப்பதை தெளிவாக உணர முடிகின்றது. குழந் தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஏனைய உரிமைகளில் பெற்றோர் கவனயீனமாக இருக்கின்றனர்.

இஸ்லாம் குழந்தைகளுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதை கடமையாக்கி யுள்ளது. அத்துடன் நீச்சல் போன்ற விளையாட்டுக்களையும் பயிற்றுவிக்கு மாறு ஊக்குவித்துள்ளது. அவர்களுக்கும் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்க ளுக்கு மிடையிலான உறவையும் அயலவர் களுக்கிடையிலான உறவையும் ஏற்படுத்துமாறு கூறியிருக்கின்றது. ஆனால், இந்நிலமைகளை இன்று காண முடியாதுள்ளது.

பெரும்பாலான குழந்தைகளுக்கு தமது பெற்றோரை தவிர வேறு உறவுக ளைத் தெரியாது. சிலவேளை பாடசாலை பாடங்களை கற்றுக் கொடுக்கவரும் ஆசிரியரை அதிகமாக தெரிந்திருக்கும். அவர்தான் வீட்டிற்கு வரும் ஒரே யொரு விருந்தாளியாக இருப்பார்.

இதனால் குடும்பம் சமூகத்திலிருந்தும் ஏனைய குடும்பங்களிலிருந்தும் ஒதுக்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு சமூகத்துடன் உரையாடுவதற்கான, பழகு வதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. அவர்களுக்குள் ஏக் கம் குடிகொண்டிருக்கின்றது. அவர்கள் சிறுவயதிலேயே நோயாளிகளாக மாறி விடுகின்றனர். சிறியதொரு தடிமலிலும் அவர்கள் சோர்ந்துவிடுகின் றனர்.

இங்குதான் இஸ்லாம் வழிகாட்டியுள்ள குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் தெளிவாகின்றது. குழந்தைகளின் உலகம் விசாலமானது. அவர்களின் கனவுக ளும் விசாலமானது. அவர்கள் அடைய விரும்புகின்ற இலக்குகளும் உயர்ந் தது. ஆனால் அவற்றை நாம் எமது விருப்புக்களினால் சுருக்கிவிடுகின்றோம். அல்லது அழித்துவிடுகின்றோம்.

நாம் வரலாற்றில் மிக இள வயதில் சாதனைகள் செய்த பலரை கண்டிருக் கின்றோம். இன்றும் கண்டு வருகின்றோம். ஆனால், எமது பிள்ளைகள் அந்த சாதனையாளர்களில் ஒருவராக வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் நவீன முறைகளால் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். எனவே, எமது குழந்தைகளை ஆளுமையுள்ளவர்களாக வளர்த் தெடுப்பதற்கு பின்வரும் விடயங் களில் நாம் இதன்பிறகாவது கவனம் செலுத்த வேண்டும்.

1. அல்குர்ஆன், ஸுன்னா கற்றுத் தருகின்ற பயிற்றுவிப்பு முறைகளை தேடி கற்க வேண்டும்.

2. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

3. குழந்தைகளின் எல்லா வளர்ச்சிக்கட்டங்களிலும் மார்க்கக் கல்வியை கற்பிப்பதற்கு மறக்கக் கூடாது.

4. குடும்ப உறவினர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துதல், அவர்களை அடிக்கடி சந்தித்தல்.

5. குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகளை, விளையாட்டுக்களை கற்றுக் கொடுத்தல்.

6. குழந்தைகளுடன் இருப்பதற்காக ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுதல்.





நன்றி: மீள்பார்வை
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவக்குரல்

- - - - -

பயணம்
ஆன்மீக அமர்வுகளுக்கான இதழ்
வைகறை
இஸ்லாமிய குடும்ப சஞ்சிகை
சர்சதேச பார்வை
சர்வதேச விவகாரங்களுக்கான இஸ்லாமிய இதழ்


NewsView
ஒரு புதிய பார்வை