Friday, May 14, 2010

இஸ்லாம் ஒன்றே தீர்வு அதுவே எமது கோஷம்








கலாநிதி முஹம்மத் பதீஉ
(இஹ்வான் அமைப்பின் பொது கண்காணிப்பாளர்)





நவீன இஸ்லாமிய உலகை வழிநடாத்திச் செல்வதில் இஹ்வான் இயக்கத்துக்குப் பாரிய பங்குண்டு. இஹ்வான் இயக்கம் அறபு-இஸ்லாமிய நாடுகள் தொட்டு உலகின் பல நாடுகளில் நுணுக்கமான திட்ட நகர்வுகளைக் கொண்டு செயற்படுகின்றது. அது இஸ்லாத்தை ஆட்சிபீடமேற்றி வெறும் அரசியலை மாத்திரம் செய்து விட்டுப் போகும் இயக்கமல்ல. உலகம் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாமியத் தீர்வை முன்வைப்பதுதான் இஹ்வான் இயக்கத்தின் சிறப்பம்சம்.

இஹ்வான் இயக்கத்தின் புதிய தலைவராக கலாநிதி முஹம்மத் பதீஉ தெரிவுசெய்யப்பட்டது நாமறிந்ததே. தலைமைப் பொறுப்பை ஏற்றதன் பின் பல தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார் அவர். ஆனால், பதிப்பு ஊடகத்துறை என்ற வகையில் அண்மையில்தான் ஒரு பேட்டி வழங்கப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பெற்றது அறபு ஊடக உலகில் கவனயீர்ப்பைப் பெற்று வரும் அல்முஜ்தமஃ சஞ்சிகையாகும். பேட்டியின் முக்கியமான சில பகுதிகளை வாசகர்களுக்காகத் தருகிறோம். நேர்காணல்: ஸலாஹ் அப்துல் மக்ஸூத்

* இஹ்வான் இயக்கத்தினதும் எகிப்தினதும் வரலாற்றில் இது முக்கியமான தொரு காலகட்டம். இந்த வகையில் இஹ்வான்களின் புதிய தலைமை என்னென்ன விடயங்களை முதன்மைப்படுத்தி நோக்குகின்றது?

இஹ்வான்களைப் பொறுத்த மட்டில் மக்களை ஈமான், அகீதா ரீதியில் ஒன்றுபடுத்துவதும், அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அன்பு கொள்ளச் செய் வதும்தான் முக்கிய பணி. அத்தோடு, எகிப்தியர்களது தாயகத்தை மீட்டெடுக்கும் பணிக்காக எகிப்தியர்களை ஒன்றுபடுத்துவதிலும், அதற்காக உழைப்பவர்களோடு கூட்டுச் சேர்ந்து செயற்படுவதிலும் நாம் கவனம் செலுத்துவோம். அது மாத்திரமின்றி முழு மொத்த முஸ் லிம்களையும் அவர்கள் எந்த சிந்தனைப் பிரிவைச் சார்ந்திருந்த போதும் இஸ்லாமியப் பணிக்காக ஒன்றிணைக்கும் வேலையிலும் நாம் கவனம் செலுத்துவோம்.

இயக்கத்தைப் பொறுத்தமட்டில், அதன் சமீபத்திய நகர்வுகள் பற்றி பலரும் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். இவர்களை இணைக் கும் பணியை யும் செய்ய வேண்டும். நான் இவர்களிடம் "நீங்கள் இயக்கத் துக்குள் இருந்தவாறு உபதேசங்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்" என்று கூற விரும்புகி றேன்.

நாம் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொண்டால்தான் இமாம் விடும் தவறுகளை எம்மால் திருத்த முடியும். எந்தெந்த விடயத்தை முதன்மைப் படுத்த வேண்டுமென்ற பிக்ஹுல் அவ்லவிய்யாத் தையும் நாம் தொழுகையில் கற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக, இமாம் தொழுகையின் போது நடு அத்தஹிய்யாத் இருப்பை மறந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நாம் அவரைத் திருத்த வேண்டும். இதைனைக் கவனியாத இமாம் தொடர்ந்தும் அடுத்த கட்ட நகர்வை மேற்கொண்டால் நாமும் அவ்வாறே செய்ய வேண்டும். இப்படியாக அவர் தொடர்ந்தும் தவறிழைத்துக் கொண்டிருந்தாலும் அவரைத் திருத்த வேண்டும்.

இன்னுமொரு உதாரணத்தைச் சொல்வதாயின், இமாம் ஒரு ரக்அத்தைக் கூடுதலாகத் தொழுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நாம் அவரைத் திருத்த வேண்டும். அவர் அதனைக் கவனியாது எழுந்து தொழுதால், நாம் அத்தஹிய்யாத் இருப்பிலேயே இருந்துவிட்டு, இமாம் மீண்டும் எம்முடன் வந்து சேர்ந்ததும் அவருடன் சேர்ந்து ஸலாம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் தான் நீங்கள் கட்டுப்பாடு மிக்க உண் மையான படை வீரராக இருப்பீர்.

எப்போதும் கட்டுப்பட வேண்டிய விடயங்களில்தான் கட்டுப்பட வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயங்களில் ஒரு போதும் கட்டுப்படக் கூடாது.

* கதீபா, முஅஸ்கர், ரிஹ்லா என்ற தர்பிய்யா வழிமுறைகளை இஹ்வான்கள் கொண்டிருக்கின் றனர். இன்று பாதுகாப்புச் சிக்கல்களும் இருப்பதனால் வேறு ஏதும் வழிமுறைகளையும் இயக்கம் பின்பற்றுகிறதா?

"அறிவு முஃமினின் தொலைந்து போன சொத்து. அவன் அதனை எங்கு கண்டாலும் எடுத்துக் கொள் வான்." இங்கு அறிவு என்பது பொருத்தமான இடத்தில் பொருத்த மான பொருளை வைப்பதாகும். எம்மிடம் சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை நாம் எப்படியேனும் நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். வாராந்தம் நடை பெறும் எமதுஉஸ்ராமுறைமை தவிர்க்க முடியாத ஒன்று. இது நடைமுறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வழிமுறையும் கூட. தஆருஃப், தபாஹும், தகா புல் என்ற மூன்று அடிப்படைகளில் நகர்ந்து செல்லும் இந்த முறைமையை உருவாக்கிய இயக்க ஸ்தாபகர் இமாம் ஷஹீத் ஹஸனுல் பன்னா எதிர்பார்த்த விளைவுகளை இதற்கூடாக நாம் நிதர்சனமாகக் காண்கிறோம்.

முஸ்லிம் வீடுஎன்ற படித்தரமும் இஹ்வான்களின் அபிவிருத்திப் படிமுறையில் முக்கியமான தொருகட்டம். இங்கு பயிற்றுவிக்கப்பட்டு, பண்படுத்தப்பட்ட தனிநபர்கள் இருப்பர். இந்தப் படித்தரத்தைத் தொடர்ந்து வீடு, சமூகம்... என்றவாறு படித்தரங்கள் விரிந்து செல்கின்றன.

தனிநபர் உருவாக்கத்திற்கான வழிமுறைகள் எமக்குத் தடைப்பட் டுப் போகும் சந்தர்ப்பங்களில் இன்னும் பல வழிமுறைகளை அல்லாஹ் எமக்குக் காட்டித் தரு வான். இந்த வகையில் நவீன இலத்திரனியல் ஊடகங்களையும் நாம் பயன்படுத்தி வருகிறோம்.

ஃபேஸ்புக், டியூடர் போன்ற நவீன இலத்திரனியல் தொடர்பூட கங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். இன்று பல முஸ்லிம்கள் இஸ்லாமிய சிந்தனை யையும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களையும் பரப்புவதில் இந்த நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

* எகிப்திய இஹ்வான்கள் பலஸ்தீனுக்காக கடுமையாக உழைக்கின்றனர். தமது சொத்து செல்வங்களையும் அதற்காக அர்ப்பணிக்கின்றனர். சிலபோது அதற்காக இராணுவ விசாரணை களுக்கும் உட்படுகின்றனர். இது இப்படியி ருக்க, ஏனைய அறபுகளதும் முஸ்லிம்களதும் கடமை என்ன? எகிப்திய சமூகத்தின் முயற்சிகள் மாத்திரம் போதுமானவையா?

இஹ்வான்கள் பலஸ்தீனுக்காக உழைக்கின்றபோதும், இன்னும் அதிகமாக நாம் முயற்சி செய்ய வேண்டும். எமது செல்வங்களை அதற்காக செலவழிக்க வேண்டும். பலஸ்தீன விவகாரம் நிறைய சுமை களைக் கொண்டிருந்த போதும் நம்பிக்கை தரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின் றன. நிச்சயமாக பலஸ்தீன் வெற்றி பெறும் இன்ஷா அல்லாஹ். சியோ னிஸத்தை யும் அதற்கு உதவிய வர்களையும் அல்லாஹ் இழிவு படுத்துவான். பலஸ் தீனுக்கு உத வாது, எதிரிகளோடு கைகோர்த்தி ருந்து, அவர்களது திட்டங்களை செயற்படுத்துவதில் உதவியாக இருந்த முனாஃபிக்குகளையும் அல்லாஹ் தண்டிப்பான்.

* சென்ற தடவை போன்று எதிர்வரும் தேர்தலிலும்இஸ்லாம் ஒன்றே தீர்வுஎன்ற கோஷத்தின் கீழ்தானா இஹ் வான்கள் செயற்படுவார்கள்?

ஆம், இது அடிப்படையான தொரு கோஷம். இதனை மக்களுக்குப் புரியவைப் பதுதான் இங்கு முக்கியம். சிலர் இந்தக் கோஷத்தைக் காட்டி மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர். இப்படியானவர்கள், "இஹ்வான்கள் வெற்றியடைந்தால் கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டி வரும். கிறிஸ்தவர்கள் பலவந்தத்துக்கு உட்படுத் தப்படுவர்" என்றெல்லாம் கூறி வருகின்றனர். இது மிகப் பெரும் தவறாகும்.

சில முஸ்லிம்களும் கூட இந்தக் கோஷத்தை சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. அதாவது, நாம் இஸ்லாமியத் தண்டனைகளை மாத்திரம் நிறைவேற் றுபவர்களாக இருப்போம் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், எமது மார்க்கம் தண்டனைகளை மாத்திர மல்ல, அழகிய பண்பாடுகளையும் கொண்டி ருக்கின்றது.

வாரிசுரிமைச் சட்டத்தை எடுத்துக் கொண்டால், அது முஸ்லிம் களுக்கு மாத்திரம் உரியதொன் றல்ல. சில கிறிஸ்தவர்கள் கூட தமது மரணத்தின் பின் சொத்துக் கள் இஸ்லாமிய ஷரீஆவின் பிரகா ரமே பிரிக்கப்பட வேண் டும் என்று மரண சாசனம் எழுதியுள்ளனர்.

* இறுதியாக இஹ்வான்களுக் கும் எமது வாசகர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இன்றைய மனிதர்களுக்குத் தேவையானதொரு தூதை நீங்கள் சுமந்திருக்கிறீர் கள். பௌதீக ரீதியில் அபரிமித வளர்ச்சி கண்ட நாரிகங்கள் கூட இந்தத் தூதின் பாலான தமது தேவையை உணர்ந் துள்ளன.

முஸ்லிம்களே! நீங்கள் உங்க ளது கைகளில் நேர்வழியின் விளக் குகளைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த மார்க்கத்தை அழகிய முறையில் உல குக்கு எடுத்துக் காட்டுங்கள். இந்த உலகு இந்த மார்க்கத்தின்பால் தேவை கொண்டுள்ளது.

எம் முன்னோர் அழகிய பண்பாட்டு நடத்தைகள் மூலம் இந்த உலகுக்கு இஸ்லாத்தை வழங்கி னர். நீங்களும் இஸ்லாத்தை செயற் படுத்திக் காட்டி, இந்த உலகுக்கு அதனை வழங்குங்கள். நீங்கள் சுமந்திருக்கும் மார்க்கம் அல் லாஹ்வுடையது. நீங்கள் அழைப்பு விடுக் கும் மார்க்கம் அல்லாஹ்வுடையது. எனவே, அந்த அல்லாஹ்வுக்காக மனிதர்களை நேசியுங்கள்.

எப்போதும் ஓடும் நீரைப் போல் வாழுங்கள். அது தன்னிலும் சுத்தமாக இருக்கும். பிறரையும் சுத்தப்படுத்தும். அல்லாஹ் எங்க ளையும் உங்களை யும் அப்படியே ஆக்கட்டும். அவன் எங்களைப் பொருந்திக் கொண்ட நிலை யில் அவனை சந்திப்போம். அல்லாஹ் உங்களுக்கும், உங்களது பிள்ளைகளுக் கும், மனைவிமார்களுக்கும் அருள்பாலிக்கட்டும். உங்கள் மூலம் இஸ்லாத்துக் கும் முஸ்லிம் களுக்கும் பிரயோசனமளிக்கட்டும். ஆமீன்.

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்



நன்றி: மீள்பார்வை
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவக்குரல்

________________________________________________________________________

பயணம்
ஆன்மீக அமர்வுகளுக்கான இதழ்
வைகறை
இஸ்லாமிய குடும்ப சஞ்சிகை
சர்வதேச பார்வை
சர்வதேச விவகாரங்களுக்கான இஸ்லாமிய இதழ்


NewsView
ஒரு புதிய பார்வை


Tamilish